Saturday 1 June 2013

ஐ.பி.எல்(I.P.L), கிரிகெட்டின் மோகத்தை குறைக்குமா?


இதை எழுதுவதற்கு இதை விட சரியான தருணம் இல்லை என நினைக்கிறேன். இந்தியாவை பொருத்தவரை கிரிகெட்டின் மோகம் மற்ற நாட்டை விட அதிகமாகவே (கிரிகெட்டிற்கு சோறு போடுவதே நாம் தான் எனவும் சொல்லலாம்) இருக்கிறது. இங்கு நினைவு தெரிந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை கிரிகெட்டின் மீது ஒருவித மோகம் கொண்டு இருப்பவர்களாக இருக்கிறார்கள். எனது பெண் நண்பியின் மகள் இரண்டாம் வகுப்பு படிக்கிறால் அவளுக்கு கிரிகெட்டில் அனைத்தும் அத்துப்படி. ஒரு மாலை எனது நண்பியிடம் இருந்து போன் வந்தது, அன்று நடந்த கிரிகெட்டில் இந்தியா தோற்றதால் தனது மகள் அழுதுகொண்டுருப்பதாகவும் எனவே அவளை சமாதானம் படுத்துமாறு எனக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அவளிடம் அரை மணிநேரம் பேசி இந்தியாவிற்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது, எனவே கவலை பட தேவையில்லை என சமாதானம் படுத்தினேன். ஆனால் அன்று மழை வந்தால் என்ன செய்வது என கேட்டு என்னை திகைக்க வைத்தால். 



நானும் ஒரு காலத்தில் கிரிகெட்டின் மீது அதிக மோகம் கொண்டுருந்தேன். ஆனால் இப்போது அந்த மோகம் முற்றிலுமாக இல்லை. முன்பேல்லாம் இந்தியா தோற்றால் அதை ஜிரணிக்க ஒரு நாளாவது ஆகும். இப்போது அடுத்த பத்தாவது நிமிடத்தில் மறத்துவிட்டு வேறு வேலை பார்க்க சென்றுவிடுகிறேன். 

ஸ்போர்ட் சேனல்கள் பே சேனல்களாக ஆனபோது வெளிநாட்டில் நடக்கும் கிரிகெட் மேச் பார்க்க முடியாத சூழ்நிலையில் அதை பார்ப்பதற்கு டிவி கடைகளின் வெளியே நின்று பார்த்திருக்கிறேன். தற்போது பகல் இரவு நடக்கும் மேச்சை கூட பெரும்பாலும் நான் பார்க்காமல் படுக்க சென்றுவிடுகிறேன். என்னுடைய மோகத்தை குறைந்ததற்கு முக்கிய காரணம் ஐ.பி.எல் தான். ICL போல் இதுவும் மக்களின் கவனத்தை ஈர்க்காது என நினைத்தேன். ஆனால் இது மக்களிடம் அதிக ஆதர்வு பெற்றது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இன்று வரை என்னால் ஜிரணிக்க முடியாத ஒன்று வெளிநாட்டு வீரருடன் சேர்ந்து விளையாடுவது தான் அதுவும் பணத்திற்காக. நாட்டிற்காக அல்லாமல் பணத்திற்காக மட்டும் விளையாடும் விளையாட்டாக மாறிய பின் எனக்கு அதன் மீது மோகம் குறைவது இயல்பு தானே. என்னை போல் எத்தனை பேர் இதை உணர்ந்தார்களோ தெரியவில்லை. 2013 ஐ.பி.எல் யை, நான் மற்ற சேனல்களை பார்க்கும் போது அதில் வரும் விளம்பர இடைவேளியின் போது மட்டுமே பார்த்தேன், அதுவும் ஆர்வமின்றி . இன்று சூதாட்ட புகார் விஷ்வருபம் எடுத்த போதும் அதை பற்றிய செய்தியை கூட படிக்க எனக்கு  விருப்பம் இல்லை. மேலும் ஐ.பி.எல் லே எனக்கு சூதாட்டம் போல் தான்  தெரிகிறது. எனக்கு கிரிகெட்டின் மீது ஆர்வம் குறைந்தது போல் மற்றவர்களுக்கும் குறையும் என சொல்லவில்லை, ஆனால் குறைய வாய்ப்புள்ளது என்பதே உண்மை.




கடல் காற்று வீசும்.....

No comments:

Post a Comment