Friday 28 June 2013

கலாச்சாரம்

நேற்று சன் நியூஸ் தொலைக்காட்சி விவாத மேடையில் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆபாசத்தை பற்றியும் அதனால் எற்படும் கலாச்சார சீரழிவு மற்றும் அதை முடக்குவது தொடர்பான விவாதத்தை பார்க்க நேர்ந்தது (வழக்கம் போல் பாதியில் இருந்து தான்). அதில் விருந்தினர்கள் அனைவரும் ஒரே கருத்துகளை முன் வைக்க அராத்து அவர்கள் மட்டும் மாற்று கருத்தை பதிவு செய்தார். 

விவாத இறுதிக்கட்டத்தில் நமது கலாச்சாரம் வெளிநாட்டில் இல்லாத மிக உன்னதமானது எனவும் ஆபாச இணையதளங்களால் இளைய தலைமுறையினர் சீரழிவதை தடுக்க அனைத்தும் தடை செய்ய வேண்டும் என முடிக்கப்பட்டது. இப்பதிவு மேற்கூறியதை பற்றியல்ல. விவாதத்தில் உபயோகிக்கப்பட்ட ஒரு சொல்லை பற்றியது. அந்த சொல் "நமது கலாச்சாரம்"

உண்மையில் நம்ம கலாச்சாரம் அவ்வளவு சிறந்ததா? என்ற எண்ணம் எனக்கு எற்பட்டது, இப்போ இல்லை, கிட்டத்தட்ட 20வது வருடத்திற்கு முன்னால். அப்போ எனக்கு இந்த எண்ணம் எற்பட காரணமாக இருந்த ஒரு நிகழ்வையும் அதே காலத்தில்  வாரபத்திரிக்கையில் வந்த செய்தி ஒன்றையும் நான் இங்கு அப்படியே பதிவு செய்கிறேன். எது சிறந்த காலாச்சாரம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இதை படிப்பதற்கு முன்னால் மீண்டும் நினைவுபடுத்தி கொள்ளுங்கள். இந்த எண்ணம் எனக்கு வந்தது சுமார் 20 வருடத்திற்கு முன்னால். 

எனது சிறுவயதில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த ஒரு சகோதரியின் வாழ்க்கையில் எற்பட்ட சோகம் என்னை வெகுவாக  பாதித்தது. என்னைவிட அவர்கள் சுமார் 10 வயது பெரியவர்கள்.அவர்களுக்கு அப்போ வயது சுமார் 23 இருக்கலாம்.  நான் அவர்களை அக்கா என்று தான் அழைப்போன். எனது வீட்டில் எனக்கு பிடிக்காத சமையல் செய்யும் போது வீம்புக்கு நான் சாப்பிடாமல் இருக்கும் போது அவர்கள் என்னை பலவந்தமாக அவர்கள் வீட்டில் சாப்பிட் வைப்பார்கள். எனது கூட பிறக்காத சகோதரியாக அவர்கள் என் மீது பாசம் வைத்திருந்தார்கள். பல நேரங்கள் எங்கள் அம்மாவுடன் எங்கள் வீட்டில் தான் இருப்பார்கள். எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும். அவர்களுக்கு அம்மா கிடையாது. அவர்கள் அப்பாவும் அண்ணன்களும் பல இடங்களில் தேடி எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு வரன் பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் (ஜோஸியம் லொட்டு லொசுக்கு எல்லாம் பார்த்துதான்). அவர்கள் திருமணமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. மாப்பிள்ளையும் அவர்கள் எதிர் பார்த்ததைவிட நல்லவராக இருந்தார். அந்த அக்காவை போல் அவரும் எங்களுக்கு ஒரு புது உறவாக கிடைத்தார். இந்த மகிழ்ச்சியெல்லாம் சில மாதங்களே நீடித்தது. ஒரு வருடங்களுக்குள்ளாக அந்த சகோதரியின் கணவர் ஒரு விபத்தில் இறந்தார். அந்த வயதில் அந்த சோகம் எனக்கே மிக பெரிய பாதிப்பை எற்படுத்திய போது மற்றவர்களை பற்றி சொல்ல தேவையில்லை. இந்த மரணத்தால் ஒருவருடையதல்ல, இருவருடைய வாழ்க்கை அழிந்ததால் துக்கம் இருமடங்காக ஆனது. சந்தோசமாக நான் சாப்பிட்ட வீட்டில் துக்க காரிய நாளில் சாப்பிட்டது எனக்கு நரக வேதனையை தந்தது.அதன் பின் அந்த சகோதரி தன்னுடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாள். யாரிடமும் சரியாக பேச மாட்டார்கள்.பொதுவாக எந்த சுப நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார்கள்.  ஒருவேளை மற்றவர்கள் தன்னை பார்க்கும் போது அபசகுனமாக நினைக்க கூடும் என்ற எண்ணமாக இருக்கலாம்.  எங்களுக்கு அவர்களோடு தொடர்ப்பு இருந்த வரை அந்த சகோதரி மறுமணம் செய்து கொள்ளவில்லை, அவர்கள் அப்பாவும் அண்ணன்களும் எவ்வளவு வலியுருத்தியும். அதற்கு அவர்கள் மனமும் இடம்  தரவில்லை (ஒருவேளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அதே எண்ணம் எற்பட்டுருக்கலாம்) . 

அதே காலகட்டத்தில் ஒரு வாரபத்திரிக்கையை படிக்க நேர்ந்தது. அதில், வெளிநாட்டில் ஒரு மணமகளையும் அவரை அழைத்து செல்லும் ஒருவருடைய புகைப்படமும் இருந்தது. அதன் கீழ் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது, மணமகளை மணமேடைக்கு அழைத்து செல்லும் நபர் மணமகளுக்கு என்ன உறவாக இருக்கும் என்று.

அதன் பதில். 

மணமகளை அழைத்து செல்லும் நபர் மணமகளின் மகன். அந்த மணமகளுக்கு 50 வயதாகிறது. தன்னுடைய மகன் முன்னிலையில் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கிறாள். 

தான் மட்டும் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது தன்னுடைய அன்னை தனிமையில் இருப்பதை விரும்பாத மகன், முன்னின்று நடத்திய திருமணம் அது. 50 வயதானவர்களுக்கு கூட ஒரு புதிய வாழ்க்கை தேவை என எண்ணும் ஒரு சமுதாயம் இருக்கத்தான் செய்யுது.

இங்கு முதல் திருமணம் நன்றாக அமைந்தால் சரி இல்லையென்றால் புதுவாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல தற்போது (முன்னாடி அதுவும் வாய்ப்பில்லை). உடன்கட்டை ஏறும் பழக்கம் நம்நாட்டில் தான் இருந்தது என எண்ணும் போது உண்மையில் நமது கலாச்சாரம் உன்னதமானதா? என்ற கேள்வி எழுகிறது.


Thursday 13 June 2013

ஞாபகம் வருதே!

இன்று செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவிட்டது (ஒன்றிரண்டு பேர்கள் இன்னும் பயன்படுத்தாமல் இருக்கலாம்). பள்ளி செல்லும் மாணவர்கள் கூட செல்போன் வைத்திருக்கிறார்கள். சட்டை பேண்ட் போட மறந்தாலும் பெரும்பாலும் செல்போனை நாம் மறக்க மாட்டோம். நம்மிடத்தில் செல்போன் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிட்டது என்பது முற்றிலும் உண்மை. செல்போன் இல்லாத ஒரு நாளை கூட நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. செல்போனின் தீமைகளை பலர் பட்டியலிட்டாலும் அது நம் காதுகளுக்கு ஏறாது சொல்லப்போனால் அது அவர்களாளேயே புறக்கணிக்க முடியாது . ஒருவேளை நாம் செல்போனை முற்றிலுமாக புறக்கணிக்க எண்ணினாலும் தோல்வி என்னவோ நமக்கு தான.

செல்போனை போன்று மனிதன் வாழ்க்கையில் மற்றொரு இன்றியமையாத நிகழ்வு ஒன்று டி.வி. சினிமாவை விட ஒரு சதவிதமாவது முன்னால் இருப்பது டி.வி தான். நம் வீட்டில் உள்ள டி.வியில் மொத்தம் எத்தனை சேனல்கள் ஒளிபரப்பபடுகிறது என்பது சத்தியமாக நமக்கு தெரியாது( உங்களுக்கு தெரிந்திருந்தால் கின்னஸ் ரெக்கார்டுக்கு முயற்ச்சி செய்யவும்).இப்போ இருக்கும் காலத்தை விட்டு சுமார் 25 வருடத்திற்கு பின்னோக்கி சென்று பார்த்தால். அந்த காலத்தில் டெலிபோன் வைத்திருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். டி.வி யில் DD சேனலை தவிர வேறு சேனல்கள் இல்லை. DD யில் பார்த்து மகிழ்ந்ததை போல் இப்பொழுது உள்ள எண்ணற்ற சேனல்கலால் அந்த மகிழ்ச்சியை தர முடியவில்லை என்பதை நாம் அறிவோம்.
இந்த டெலிபோனில் நீங்கள் பேசியதுண்டா?

சிறு வயதில், நாம் கண்டு கேட்டு ரசித்து மகிழ்ந்த பல நிகழ்வுகள் கால வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு, நம்முடைய ஆழ் மனதில் படிந்துவிட்டது.  அப்படி நம் ஆழ் மனதில் படிந்து இருக்கும் நினைவுகளை நாம் முற்றிலும் மறக்கவில்லை என்றாலும், அதை நாம் நினைவுபடுத்தி பார்ப்பது அபுர்வம். 

நான் முற்றிலுமாக மறந்த பல சிறு வயது நினைவுகளை மீண்டும் எனக்கு நினைவுப்படுத்தியது ஒரு நிகழ்ச்சி. ஒரு முன்று மாதத்திற்கு முன் ஒரு பள்ளி ஆண்டு விழாவை பார்க்க நேர்ந்தது. அதில் வந்த ஒரு கலை நிகழ்ச்சி பாட்டை கேட்டவுடன் நான் என் சிறு வயதிற்கே சென்றுவிட்டேன்.அந்த பாடல் பலவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஒரு சங்கிலி தொடர் போன்று அனைத்தையையும் எனக்கு நினைவுபடுத்தியது. அந்த நினைவுகளில் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு அந்த பாடலை பற்றி கூறுகிறோன்.

சிறு வயதில் நாங்கள் குடியிருந்த இடத்தில் சற்று வசதி படைத்த ஒருவர் வீட்டில் மட்டும் தான் டி.வி இருந்தது. மாலை நேரத்தில் அவர்கள் வீட்டில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் டி.வி பார்க்க அனுமதிப்பார்கள். ஒரு நாள் அவர்களுக்கு வீட்டில் என்ன வேலையோ அன்று டி.வி போடவில்லை. நாங்கள் எல்லாரும் விளையாட சென்றுவிட்டோம் ஆனால் எனது தம்பி (தம்பியின் வயது அப்போ நான்கு) மற்றும் சில சிறுவர்கள் மட்டும் அவர்கள் வீட்டின் முன்பு டி.வி போடுவார்கள் என்று காத்திருந்தனர். அப்பொழுது அந்த வீட்டின் பெண்மணி டி.வி போடவில்லை நாளைக்கு வாங்கள் என்று அவர்களை விரட்டி கொண்டுருந்தார்கள். அந்த நேரம் பார்த்து என் தம்பியை அழைத்து செல்ல எங்கள் அம்மா அங்கே வர இதையெல்லாம் கேட்க நேர்ந்தது. இதன் காரணமாக எங்கள் அப்பாவிடம் சென்று நாமும் டி.வி வாங்க வேண்டும் என்று சண்டை போட்டார்கள்.  அதன் பயனாக எங்கள் அப்பா டி.வி வாங்க ஒப்பு கொண்டார், சில நிபந்தனைகளுடன்(அதில் ஒன்று அடுத்த வருடம் வரை புதிய துணிமணி கேட்க கூடாது என்று. பின்னர் இந்த நிபந்தனையை எங்கள் அம்மா காற்றில் பறக்கவிட்டது தனி கதை). முதல் முதலில் நாங்கள் வாங்கிய கதவுடன் கூடிய அந்த டி.வியின் பெயர் Westen(நீங்கள் கேள்விபட்டுருக்கலாம்). அந்த நேரத்தில் நடுத்தர குடும்பத்தினர் ஒரு டி.வி வாங்குவது என்பது மிக கடினமான ஒன்று. எங்களை பார்த்து தொடர்ந்து பலர் டி.வி வாங்கினார்கள் (எல்லாம் இன்ஸ்டால்மட்டில் தான்). அந்த டி.வி எங்கள் வீட்டிற்கு வந்த போது இருந்த மகிழ்ச்சியை இப்போ நினைக்கும் போதும் ஒரவித மனகிளர்ச்சி எற்படுகிறது. அந்த கருப்பு வெள்ளை டி.வி தந்த மகிழ்ச்சியை எனக்கு இப்போ உள்ள LED டி.வியால் தர முடியவில்லை.

கிட்டதட்ட இதே போல தான் இருந்தது

என் பழைய நினைவுகளை நினைவு படுத்திய  இந்த பாடலை இணையத்தில் தேடும் போது என்னை போல் பலருக்கும் அதே உணர்வு எற்பட்டதை அறிய முடிகிறது. நீங்கள் பல முறை பார்த்து கேட்டு மறந்த ஒற்றுமையின் வலிமையை உணர்த்தும் இந்த அனிமேட் பாடலை மீண்டும் கேட்டு பாருங்கள், உங்களுக்கு அந்த உணர்வு எற்படும்.


Ek Titli Anek Titliyan


Title: EK ANEK AUR EKTA (Ek titli Anek Titliyan)
Synopsis: An animation film weaving a story around the proverb "United we stand, Divided we fall".
Direction: Vijaya Mulay
Animation: Bhimsen
Music: Vasant Desai
Duration: 7.29 mins
First telecast year: 1974
Telecast By: Doordarshan...Very nostalgic...humming ' Ek titli, anek titliyaan'.
Singer: Sung by "SADANA SARGAM" At her age of 6 YEARS.

Suraj ek chanda ek tare anek (Lyrics)
Intro Text:
Films division dwara prastuthi…
Shiksha proudhogiki kendr ki bhent
Lyrics:
mmmm mmmm
hind desh… mmm huhu… hum sabhee…. ek hain… tara ra ra raaa
bhashaa anek hain
mmmm mmmm bhasha anek hain…. mmmm mmmmm
yeh anek kya hain didi ?
anek yani bahut saare….
bahut saare, kya bahut saare?
acha, batatee hoon…
suraj ek…
chanda ek…..
taare anek….
taroN ko anek bhi kehte hain ?????
nahi nahi !!
dekho phir se
suraj ek, chanda ek, ek ek ek karke taare bane anek….
theek se samjhao naa didi
dekho dekho ek gilahari
peeche peeche anek gilahariyan
ek thithli, ….. ek aur thithali……
ek ek ek karke ho gayee ab, anek thithliyaaN…
samajhgaya didi
ek ungli, anek ungliyaan
haaan,
didi didi woh dekho anek chidiyan…
anek chidiyoN ki kahani sunoge ….
haan haan
aa aa aaa,
ek chidiya, ek ek karke anek chidiya….
dana chugne aayee chidiyan …..
chorus : didi humen bhi sunaonaa…….
tho suno phirse…
ek chidiya, anek chidiyaN
dana chugne baith gayee thi …..
hai raam, par wahan byaadh ne ek jaal bhijaya tha…
byaadh, byaadh kaun didi ?
byaadh … chidiya pakadne wala
“phir kya hua didi, byaadhne unhe pakad liya, maar daala… ”
un..huh…
Himmat se gar jute rahe to
chote ho par, mile rahe tho
bada kaam bhi hove bhaiya..
bada kaam bhi hove bhaiya …
ek..do..theen..
Chaturrr cidiyaaN, sayaani chidiyaaN
miljul kar, jaal le kar, bhaagee chidiyan
furrrrrrrrrrrrrrrrrr
door, ek gaaon ke paas, chidiyon ke dost, chuhe rahte the….
aur unhone, chidiyonkaa jaal, kaat diya………
tho dekha ki tumne, anek, sirf ek hojate hain tho kaisa mazaa aata hain
didi main bataoon…
HO GAYE EK …
BAN GAYEE TAKAT..
BAN GAYEE HIMMAT…
didi agar hum ek ho jaayen to bada kaam kar sakte hain?
haan haan, kyon nahi …
to is ped ke aam bhi thod sakte hain ???
haan, thod sakte hain, par jugat lagani hogi …
*
* *
* * *
* * * *
achaa, eh jugat, wah… bada mazaa ayegaa..
hind desh ke niwasi sabhi jana ek hain, -2
rang-roop vesh-bhaasha chaahe anek hain -2
ek-anek… ek-anek…
suraj ek, chanda ek, taare anek,
ek titli, anek titaliyaaN
ek gilhari , anek gilhariyaaN
ek chidiyan, ek ek… anek chidiyaan
bela gulab juhi champa chameli….. -2
phool hain anek kintu mala phir ek hai …-2
Text:
Sahayak: S.M. Hasan, Mahesh Taavre, Girish Rao
Design animation thadhaa nirmaan: Bheem Sen
Centre for educational technology
N.C.E.R.T
Aurobindo Marg
New Delhi - 110016
youtube-ல் காணோளியை பார்க்க இங்கு சொடுக்கவும்




கடல் காற்று வீசும்.....





Thursday 6 June 2013

எனக்கு பிடித்த பாடல்

பொதுவாக நமக்கு ஒவ்வொரு காலத்திலும் எதாவது ஒரு பாடல் மனதை மயக்கும். அப்படி நமது மனதை மயக்கிய பாடலை திரும்ப திரும்ப கேட்டு மகிழ்வோம், அதுவும் காதல் பாடல் என்றால் ரசிப்புதன்மை இரண்டு மடங்காக ஆகும். அது நமக்கு புரியாத  மொழியாக இருந்தாலும் மேலும்  நமது நண்பர்களுக்கும் பரிந்துரைப்போம் ( யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ). நான் அதிகம் வேற்று மொழி பாடல்களை கேட்க மாட்டேன் என்றாலும் நண்பர்களின் பரிந்துரையால் சில பாடல்கள் கேட்க நேர்ந்தது.  அப்படி கேட்டவுடன்   ஈர்க்கப்பட்ட பாடல் தான் இந்த Man Tu Talbat. உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். இப்பாடல் படம் வந்து சில வருடங்கள் ஆனதால் பலர் கேட்டுருக்கலாம். ஒருவேளை கேட்காமல் இருப்பவர்களுக்காக இப்பதிவு.
                         

                                                  Man Tu Talbat ( Lyrics )

Tere Bina, Jee Na Paaun, Sung Tere Jee Na Paaun
Hoke Juda Ab Hum Milein, Ab Na Kabhi Hongey Judaa

Ab Kyaa Kahun Iske Siva;
Man Tu Talbat, Tu Man Talbat (2)

Vey Nakh Inti (2), Ye Noor Al Kahein, Be Nakh Inti
Teb Li Haya Dhi, Takh Li Un Yunhi, Ukhne Vele Geynvhi, Vifte Ki...

Ab Kyaa Kahun Iske Siva;
Man Tu Talbat, Tu Man Talbat (2)

Tere Bina, Jee Na Paaun; Sung Tere Jee Na Paaun (2)
Hoke Juda Ab Hum Milein, Ab Na Kabhi Hongey Judaa

Ab Kyaa Kahun Iske Siva;
Man Tu Talbat, Tu Man Talbat (4)

[Oh My Love, I Have The Key In Love, I Wil Be There For You, Always Be There For You]

Ab Mil Gaye Lo Fir Se Hum, Subahon Ne Fir Choomein Kadam
Kudrat Ne Haathon Se Likhey, Khud Rishtey Ye Janmo Janam[2]
Mil Kar Rahengey Hum Yun Sada;
Man Tu Talbat, Tu Man Talbat (2)

[Oh My Love, I Have The Key In Love, I Wil Be There For You, Always Be There For You]

Vey Nakh Inti (2), Ye Noor Al Kahein, Be Nakh Inti
Teb Li Haya Dhi, Takh Li Un Yunhi, Ukhne Vele Geynvhi, Vifte Ki...

Dil Ke Woh Rag Pe Hai Likha, Har Lafz Tere Pyaar Ka
Ye Waqt Ne Hai Chaha Bhahut, Lekin Na Fir Bhi Mit Saka
Har Lamha Ye Kehne Laga
Man Tu Talbat, Tu Man Talbat (4)

[Oh My Love, I Have The Key In Love, I Wil Be There For You, Always Be There For You]


பாடலை தரவிரக்க இங்கு சொடுக்கவும்.




கடல் காற்று வீசும்.....




Saturday 1 June 2013

ஐ.பி.எல்(I.P.L), கிரிகெட்டின் மோகத்தை குறைக்குமா?


இதை எழுதுவதற்கு இதை விட சரியான தருணம் இல்லை என நினைக்கிறேன். இந்தியாவை பொருத்தவரை கிரிகெட்டின் மோகம் மற்ற நாட்டை விட அதிகமாகவே (கிரிகெட்டிற்கு சோறு போடுவதே நாம் தான் எனவும் சொல்லலாம்) இருக்கிறது. இங்கு நினைவு தெரிந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை கிரிகெட்டின் மீது ஒருவித மோகம் கொண்டு இருப்பவர்களாக இருக்கிறார்கள். எனது பெண் நண்பியின் மகள் இரண்டாம் வகுப்பு படிக்கிறால் அவளுக்கு கிரிகெட்டில் அனைத்தும் அத்துப்படி. ஒரு மாலை எனது நண்பியிடம் இருந்து போன் வந்தது, அன்று நடந்த கிரிகெட்டில் இந்தியா தோற்றதால் தனது மகள் அழுதுகொண்டுருப்பதாகவும் எனவே அவளை சமாதானம் படுத்துமாறு எனக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அவளிடம் அரை மணிநேரம் பேசி இந்தியாவிற்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது, எனவே கவலை பட தேவையில்லை என சமாதானம் படுத்தினேன். ஆனால் அன்று மழை வந்தால் என்ன செய்வது என கேட்டு என்னை திகைக்க வைத்தால். 



நானும் ஒரு காலத்தில் கிரிகெட்டின் மீது அதிக மோகம் கொண்டுருந்தேன். ஆனால் இப்போது அந்த மோகம் முற்றிலுமாக இல்லை. முன்பேல்லாம் இந்தியா தோற்றால் அதை ஜிரணிக்க ஒரு நாளாவது ஆகும். இப்போது அடுத்த பத்தாவது நிமிடத்தில் மறத்துவிட்டு வேறு வேலை பார்க்க சென்றுவிடுகிறேன். 

ஸ்போர்ட் சேனல்கள் பே சேனல்களாக ஆனபோது வெளிநாட்டில் நடக்கும் கிரிகெட் மேச் பார்க்க முடியாத சூழ்நிலையில் அதை பார்ப்பதற்கு டிவி கடைகளின் வெளியே நின்று பார்த்திருக்கிறேன். தற்போது பகல் இரவு நடக்கும் மேச்சை கூட பெரும்பாலும் நான் பார்க்காமல் படுக்க சென்றுவிடுகிறேன். என்னுடைய மோகத்தை குறைந்ததற்கு முக்கிய காரணம் ஐ.பி.எல் தான். ICL போல் இதுவும் மக்களின் கவனத்தை ஈர்க்காது என நினைத்தேன். ஆனால் இது மக்களிடம் அதிக ஆதர்வு பெற்றது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இன்று வரை என்னால் ஜிரணிக்க முடியாத ஒன்று வெளிநாட்டு வீரருடன் சேர்ந்து விளையாடுவது தான் அதுவும் பணத்திற்காக. நாட்டிற்காக அல்லாமல் பணத்திற்காக மட்டும் விளையாடும் விளையாட்டாக மாறிய பின் எனக்கு அதன் மீது மோகம் குறைவது இயல்பு தானே. என்னை போல் எத்தனை பேர் இதை உணர்ந்தார்களோ தெரியவில்லை. 2013 ஐ.பி.எல் யை, நான் மற்ற சேனல்களை பார்க்கும் போது அதில் வரும் விளம்பர இடைவேளியின் போது மட்டுமே பார்த்தேன், அதுவும் ஆர்வமின்றி . இன்று சூதாட்ட புகார் விஷ்வருபம் எடுத்த போதும் அதை பற்றிய செய்தியை கூட படிக்க எனக்கு  விருப்பம் இல்லை. மேலும் ஐ.பி.எல் லே எனக்கு சூதாட்டம் போல் தான்  தெரிகிறது. எனக்கு கிரிகெட்டின் மீது ஆர்வம் குறைந்தது போல் மற்றவர்களுக்கும் குறையும் என சொல்லவில்லை, ஆனால் குறைய வாய்ப்புள்ளது என்பதே உண்மை.




கடல் காற்று வீசும்.....