Monday 11 August 2014

பி.எஸ்.என்.எல்-லின் அராஜகமா அல்லது ஏமாற்று வேலையா அல்லது அழிவா?



பி.எஸ்.என்.எல் தன் பிராண்பேண்ட் FN (Free Night Plan) பிளானில் முன் அறிவிப்பின்றி CNT (Concessional night traffi) என மாற்றி, அதை பயன்படுத்திய வாடிக்கையாளர்களை அதிக பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளியுள்ளது. ( கட்டுவார்களா என்பது தனி கதை). 



அதாவது பல வருடங்களாக Free Night Plan ( இரவு 02.00 மணி முதல் காலை 08.00 மணி வரை இணையம் இலவசம், மற்ற நேரங்களில் 2.5 GB மட்டும் இலவசம்) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம், SMS மூலமாகவோ அல்லது E-Mail மூலமாகவோ தொலைபேசி, கைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிவிக்காமல் இரவு நேரத்தில் (02.00 AM to 08.00 AM)  பயன்படுத்தும் இணையத்திற்கு 0.15 பைசா (1 GB= Rs.150/- )  கட்டணம் வகுத்துள்ளது 01/07/2014 முதல். இதை அறியாத வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இரவு நேரத்தில் (இலவசம் என்று) பயன்படுத்த மாதாந்திரம் செலுத்த வேண்டிய தொகையை விட 10 மடங்கிற்கு மேல் அதிகமான தொகை வந்துள்ளது.

கீழே தந்துள்ள இணைப்பில் இதை பற்றியும், அதனை பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் குமுறல்களையும், வேதனையும், கோபத்தையும் படித்து தெரிந்து கொள்ளவும் கண்டிப்பாக.

http://www.indiabroadband.net/bsnl-broadband/47264-bsnl-free-night-plan-has-stopped.html

http://telecomtalk.info/unethical-move-by-bsnl-customers-not-intimated-about-major-plan-changes/119380/

http://telecomtalk.info/end-of-a-golden-era-bsnl-to-do-away-with-night-unlimited-broadband-plan/118528/

http://telecomtalk.info/bsnl-broadband-huge-bills-sudden-plan-changes/120396/

http://www.bsnlteleservices.com/2014/06/bsnl-broadband-free-night-usage-plans.html
 

பி.எஸ்.என்.எல் எற்கனவே தன்னுடைய பெயரையும் வாடிக்கையாளர்களையும் இழந்துவிட்டது, மீதியுள்ள வாடிக்கையாளர்களையும் இழக்க வேண்டிய சூழலை அதுவே எற்படுத்திக்கொண்டது என நினைக்கிறேன்.

இதில் வேறு Connecting India-வாம்.    கக்கக்க போ............






கடல் காற்று வீசும்...... எப்போது என்று தெரியாது.