Thursday 24 October 2019

சினிமா என்னும் மாயை

      சினிமா.. சினிமா.. சினிமா... இதை மட்டும் எடிசன் கண்டுபிடிக்காமல் இருந்திருத்தால் என்ன மாதிரியான உலகத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டியிரும்போம் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். சினிமா இல்லாத உலகத்தை எண்ணிப்பர்க்க முடியுமா?

எனது சிறு வயதில் எங்கள் தெருவில் உள்ள சிலர் இரவு நேரங்களில் டெக்கில் சினிமா போடுவது வழக்கம். எனது வயதுடைய நண்பர்களுடன் நான் ஆவலுடன் காத்துக்கொண்டியிரும்பேன் போடுவது ரஜினி படம் என்றால்  மகிழ்ச்சி இரட்டிப்பு. எனது நண்பர்களில் சிலர் சிறு சிறு காகிதங்களை கீழித்து வைத்துக்கொண்டு ரஜினி திரையில் தெரியும் போது ஆர்ப்பரித்து வீசுவார்கள். இந்த காகித வீசல் படத்தில் சில சாகசம் அல்லது சண்டை காட்சிகளில் மீண்டும் மீண்டும் நடைப்பெரும். அந்த வயதில் எனக்கு அவர்கள் செய்வதை பார்த்து கைதட்டி  முழுமையாக ரசிப்பேன். ஆனால் அதை வளர்ந்த பின்பும் இங்கு நிறைய ரசிக சீகாமணிகள் செய்து கொண்டுருப்பதை பார்க்கும் போது தான் எனக்கு நேருடலாக இருக்கிறது.

ஒர் இரவு எந்த படம் என நினைவில்லை அந்த படத்தில் காரில் வில்லன்கள் ஒரு பெண்ணை கடத்தி செல்ல முயல்வார்கள். ஆனால் கார் நகராது அப்போது கேமரா காரின் பின் பகுதியில  கட்டப்பட்டு இருக்கும் கயிறை காட்டும் அதன் மறு முனையை காட்ட கேமரா அப்படியே நகரும். அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு மிக பெரிய ஆவல் அந்த கயிறு எங்கு கட்டப்பட்டு இருக்கும் என்பது தான். சத்தியமாக செல்கிறேன் அடுத்த காட்சியை பார்த்து எனக்கு ஒன்னும் புரியவில்லை. எனது நண்பர்கள் காகிதங்களை காற்றில் பறக்க விட்டு ஆர்பரிக்கிறார்கள் இருத்தும் புரியவில்லை (இப்பொழுதும் தான்). அந்த வயதிலேயே எனக்கு பல கேள்விகள் மனதில் எழுந்தது. பின் பெரிய மாஸ் கதாநாயகர்கள் இது போன்ற காட்சியில் நடிக்கும் போது அத எந்தவித நகைப்புக்கும் உள்ளாவது  இல்லை என்பதை பின் பல படங்களை பார்த்து தெரிந்து கொண்டேன். அது போன்ற காட்சிகள் இல்லாத படங்கள் வருவது மிக மிக குறைவு என சொல்லலாம். இது போன்ற காட்சிகளை கொண்ட படங்கள் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என பல பதிவுலக ஜாம்பவான்கள் எழுதியுள்ளனர். தமிழ் சினிமாவில் அபத்தமான காட்சிகள் இல்லாமல் இருப்பது மிக அபூர்வம். இன்றும் இது போன்ற அபத்தங்கள் கொண்ட காட்சிகள் மட்டும் தான் தமிழ் சினிமாவில் பார்க்க முடிகிறது.

கீங் காங் படத்தை சிறு வயதில் எத்தனை முறை பார்த்தேன் என நினைவில்லை. அதன் பின் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஜெட்லி படங்ளைப்போன்ற சண்டை காட்சி உள்ள படங்களை தேடி தேடி பார்த்ததுண்டு. தமிழில் டப்பிங் படங்கள் வர துவங்கிய பின் தான் ஆங்கில படங்களை பற்றிய பார்வை கிடைத்தது. ஆலிவுட் படங்களை புகழ்த்துக்கொண்டு தமிழ் படங்களை திட்டிக்கொண்டிருந்தேன். பின் சில நண்பர்களின் பரிந்துரையால் கொரியன் படங்கைளை பார்த்த போது தான் ஆலிவுட் படங்கள் கொரியன் படங்ளை விட தரத்தில் தாழ்த்திருப்பதை என்னால் உணர முடிகிறது. இது இப்போது உள்ள எண்ணம் தான். நான் பார்த்து ரசித்த படங்ளை பற்றிய விமர்சனத்தை படித்து ரசிப்பது உண்டு. சில படங்களின் விமர்சனத்தை தமிழில் யாரும் எழுதாததை எண்ணி வியந்தது உண்டு. அப்படி யாரும் எழுதாத படங்களை பற்றி இனி வரும் காலங்களில் எழுத முயற்ச்சி செய்ய வேண்டும் என எண்ணுகிறேன் பார்ப்போம்.