இன்றைய உலகில் பொழுதுபோக்கில் முதன்மையாக இருப்பது தொலைக்காட்சி. மேலும் தமிழ் தொலைக்காட்சியில் பெண்களுக்கென்றே ஒரு தனி இடம் வகிப்பது சீரியல்கள.
முதலில் இந்த சீரியலால் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகீர்ந்துகொள்கிறேன். வெறும் அனுபவம் மட்டும் அல்ல அதில் ஒரு பாடமும் கற்றுக்கொண்டேன்.
எனது நண்பர்களில் ஒருவர் புதிதாக வீடு கட்டியிருந்தார். அவர் வீட்டு கிரகபிரவேசத்திற்கு போக முடியாத சூழலில் வேறு ஒரு நாளில் வருவதாக வாக்குருதி கொடுத்திருந்தேன். இரண்டு வாரம் கழித்து, ஒரு வீட்டு அலங்கார பொருளை வாங்கி கொண்டு அவர் வீட்டுக்கு இரவு 07.00 மணிக்கு சென்றேன்.
நண்பரும் மகிழ்ச்சியுடன் என்னை அழைத்து சோபாவில் அமர செய்து டீ பிஸ்கெட் கொடுத்து உபசரித்து என் அருகில் அமர்ந்துவிட்டார். பின்பு நான் கேட்ட கேள்விக்கு ஏனோ தானோ என்று பதில் அளித்தார். முதலில் எனக்கு புரியவில்லை. பின்புதான் தெரிந்தது அவர் கவனம் தொலைகாட்சியில் இருப்பது. அவர் குடும்பத்தாரோ மரியாதைக்கு இரண்டு வார்த்தை பேசி விட்டு நானாச்சி என் நண்பனாச்சி என்று சீரியல் பார்த்துகொண்டுருந்தனர். அவர்கள் பார்வை உபசரிப்பு எல்லாம் விளம்பர இடைவெளியின் போது மட்டும் என் பாக்கம் திரும்பியது. வந்திருக்கும் நபர் என்ன நினைப்பார் என்ற எண்ணம் கூட இல்லை அவர்களுக்கு. ஆண்கள் சீரியல் பார்க்க மாட்டார்கள் எனும் எனது எண்ணத்தை அன்றோடு குழிதோண்டி புதைத்துவிட்டேன்.அன்று வேறுவழியின்றி இரண்டு மகா மட்டமான சீரியல் பார்க்க நேர்ந்தது .
எனக்கு என்ன சோகம் என்றால் அவர் என்னை அப்படி வதைத்தும் கடைசி வரை வீட்டை சுற்றிக்காட்டவில்லை என்பது தான. அங்கு இருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் இரவு 06.00 மணிக்கு மேல் யார் வீட்டிற்கும் போக கூடாது என்பது தான். யாருக்கு தெரியும் அவர்களும் ஏதேனும் சீரியல் பார்க்கலாம். இப்படி இவர்கள் பார்க்கும் சீரியல்கள் தரமானதுதானா?
தமிழ் சீரியலில் பெருமான்மையான பெண்கள் கொடுர மனம் கொண்டவர்களாக காட்டப்பட வேண்டும் என எழுதபடாத சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. நான் பார்த்த ஒரிரு சீரியலில் பெண்கள் கொடுர மனம் கொண்டவர்களாகவும், சூழ்ச்சி செய்பவர்களாகவும், அடுத்த குடும்பங்களை கெடுக்க நினைப்பவர்களாகவும் தான் அவர்கள் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளது.
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை " என்ற பழமொழி நம்மிடத்தில் தோன்றியதா அல்லது மேலை நாட்டின் இறக்குமதியா என்ற சந்தேகம் இந்த சீரியல்களை பார்த்து போது எனக்கு தோன்றியது. இந்த சீரியலில் உச்சகட்ட அபத்தங்களாக பெண்கள் கொலை செய்பவர்களாகவும், அடுத்த பெண்ணின் கணவனை மயக்கி தான் வலையில் விழ வைப்பவர்களாகவும் காட்டப்படுவதும் தான். ஆனால் ஆண்கள் நல்லவர்களாக கண்ணியமானவர்களாக இருக்கிறார்கள் (சினிமாவில் உல்டா). உண்மையில் பெண்கள் இப்படிபட்ட மனம் கொண்டவர்கள்தானா என சநதேகம்படும் அளவிற்கு நம்மை எண்ண வைத்துவிடுகின்றனர். இதை எல்லாம் யாரும் கண்டித்ததாக தெரியவில்லை.
நகைச்சுவைக்கு என்று தனிதொலைக்காட்சி தமிழில் வந்தபோது நான் எதிர்பார்த்தது நகைச்சுவை நாடகங்கள். ஆனால் சினிமா நகைச்சுவை துணுக்குகளை கொண்டே முழு தொலைக்காட்சியும் இயங்கிகொண்டு இருக்கிறது, இது ஒரு வித சலிப்பை ஏற்படுத்துகின்றது. தமிழில் தரமான நகைச்சுவை நாடகம் இல்லாதது மிக பெரிய குறையே.
இப்போ மேலே உள்ள தலைப்புக்கு வருவோம். இந்தி சேனல்கள் எற்கனவே பரிட்சியமானவர்களுக்கு தெரிந்திருக்கும், இது ஒரு இந்தி நகைச்சுவை நாடகத்தின் தலைப்பு என்று. தமிழில் இது போன்ற நாடகம் இல்லையென்ற வருத்தம் எனக்குண்டு. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அன்பு ,பாசம், சகோதரத்துவம்,குடும்ப உறவுகள், பெரியவர்களை மதித்தல், ஒற்றுமையுடன் வாழ்தல் பேன்ற பண்புகளை கொண்டவர்களாக படைக்கப்பட்டுள்ளனர். இந்த நாடகம் SONY SAB இந்தி நகைச்சுவை தொலைக்காட்சியில் இரவு 08.30 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு மறுநாள் மதியம் 02.00 மணிக்கும் ஒளிபரப்பபடுகின்றது. மேலும் இதன் பழைய ஏபிசோட்கள் மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 வரை ஒளிபரப்பபடுகின்றன.
இந்த நாடகம் ரசிக்கும்படி இருக்கிறது ஆனால் கொஞ்சம் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். மொழி தெரியாமல் பார்த்தாலும் நடிகர்களின் முகபாவம் நமக்கு சிரிப்பை வரவைத்தாலும் அவர்களின் dialog deliveryயே அதிக நகைச்சுவை கொண்டதாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது இந்த நாடத்தை பார்த்து மகிழுங்கள்.
கடல் காற்று வீசும்............

No comments:
Post a Comment